» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆம்புலன்ஸில் வந்து சரண் அடைந்தார் ராஜகோபால்: ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை

புதன் 10, ஜூலை 2019 10:53:33 AM (IST)பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் சென்னை நீதிமன்றத்தில் ஆம்புலன்ஸில் வந்து சரணடைந்தார். படம்: ம.பிரபு

உடல்நிலையைக் காரணம்காட்டி சரணடைய அவகாசம் கோரிய சரவணபவன் ராஜகோபாலின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மாலை அவர் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சரவணபவன் ஓட்டர் உரிமையாளர் ராஜகோபால், தனது ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக அடைய நினைத்து, அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இதுதொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகிர் ஹூசைன், காசி விஸ்வநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் பாலு, ஜனார்த்தனம் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ராஜகோபால் உள்ளிட்ட அனைவரும் ஜூலை 7-ம் தேதிக்குள் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டது. அதன்படி டேனியல் உள்ளிட்ட 9 பேர் நேற்று முன்தினம் சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். முன்னதாக ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனம் ஆகியோரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் சரண் அடைய கூடுதல் காலஅவகாசம் கோரி இருவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக இருவரும் கீழமை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜகோபால், ஜனார்த்தனம் ஆகிய இருவரும், நேற்று மாலை தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டனர். சம்பந்தப்பட்ட நீதிமன்றம் 3-வது மாடியில் இருந்ததால் அவர்களை வீல்சேரில் தூக்கி வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் நீதிபதி ஜி.தானேந்திரன் முன்பாக சரண் அடைந்தனர். இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து அவர்களை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, வழியில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அங்கு கொண்டு செல்லப்பட்ட இருவருக்கும் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


மக்கள் கருத்து

உண்மைதான்Jul 11, 2019 - 11:25:12 AM | Posted IP 173.2*****

அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட நாய்க்கு பண கொழுப்பு

இவன்Jul 10, 2019 - 11:31:14 AM | Posted IP 162.1*****

நீதிமன்றம் என்றால் வாயாடி மன்றம் , 2004 ஆண்டு கொடுக்க வேண்டிய தண்டனையை வாயாடிட்டு 15 வருஷம் கழித்து தான் செய்கிறது .. என்னமா உங்க சட்டம் ...

ஜோசப்Jul 10, 2019 - 11:29:31 AM | Posted IP 162.1*****

அந்த ஆஸ்பத்திரியில ஜீவஜோதி வேல பாக்குறாங்கன்னு அந்த ஆள்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி பாருங்க. அப்படியே எந்திரிச்சி(!) நிப்பான்.

தமிழ்ச்செல்வன்Jul 10, 2019 - 11:28:33 AM | Posted IP 162.1*****

தெக்க உள்ளவங்க பூராவும் ஒரு காலத்துல சென்னைக்கு பிழைப்புக்கு போயி நல்லா சம்பாதிச்சு சொத்து சேர்த்து வச்சிருக்காங்க. ஒரு சிலர் பொட்டையில காசு பணத்தை இழந்து மீண்டும் ஊருக்கு வந்து ஈ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. அந்த ஈ ஓட்டிக்கிட்டு வரிசையில அண்ணன் ராஜகோபால் வர்றாரு. அம்புட்டுதான்.

அப்பாவிJul 10, 2019 - 11:23:35 AM | Posted IP 108.1*****

உலக மகா நடிப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory