» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி ரயில் முன் பதிவு: துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்தது

வியாழன் 27, ஜூன் 2019 10:49:42 AM (IST)

தீபாவளி ரயில் முன்பதிவு ரயில்வே முன் பதிவு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு  துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது. 

தீபாவளி பண்டிகையின்போது, சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் பணி புரியும் மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு  செல்வது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே தீபாவளிக்கு முன் நாள் சனிக்கிழமை வருகிறது. அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக இருக்கும். எனவே அவர்கள் வெள்ளிக்கிழமையே தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு கிளம்புவார்கள்.

இதன்படி அக்டோபர் 25-ஆம் தேதி முதல் தொலைதூர ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதன்கான முன்பதிவை இன்று காலை 8 மணிமுதல் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25- ஆம் தேதியின் பயணத்துக்கு இன்னும் 120 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. அக்டோபர் -27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால், வெள்ளிக்கிழமை சொந்த ஊர்கள் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர்.  நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு  துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தது. பல  முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory