» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண விபரம்: அரசு இணையதளத்தில் வெளியீடு

புதன் 26, ஜூன் 2019 4:34:15 PM (IST)

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண விவரங்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போது தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தைத் தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய கட்டண விவரமானது, இன்று (ஜூன் 26) www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டணங்களின் அடிப்படையில் தங்கள் மாவட்டத்திலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை. வரும் ஜூலை 1ஆம் தேதியன்று இதனைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கல்விக் கட்டணம் நிர்ணயிக்காத தனியார் பள்ளிகள் ஒரு மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண நிர்ணயக் குழுவை நேரில் சந்தித்து புதிய கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory