» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவலர் தேர்வில் திருநங்கைகள் பங்கேற்க வயது வரம்பு தளர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதன் 26, ஜூன் 2019 4:18:43 PM (IST)

காவலர் தேர்வில் பங்கேற்க விரும்பிய திருநங்கைகளுக்கான வயது வரம்பைத் தளர்த்தி, அவர்களை எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த திருநங்கைகள் மூவரது விண்ணப்பங்கள் வயது வரம்பைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டன. தற்போது, திருநங்கைகளுக்கான வயது வரம்பு 26ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்கத் தங்களை அனுமதிக்க வேண்டுமென்று கோரி தீபிகா உட்பட திருநங்கைகள் மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திருநங்கைகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், சமூகச்சூழலைக் கருத்தில்கொண்டு, அவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பை 45ஆக உயர்த்த வேண்டுமென்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கைம்பெண்களுக்கான வயது வரம்பு 35ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வயது வரம்பு 45ஆகவும் உள்ள நிலையில், சமூகத்தின் கீழ் நிலையில் உள்ள திருநங்கைகளுக்கான வயது வரம்பையும் 45ஆக உயர்த்த வேண்டுமென்று மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவானது நேற்று (ஜூன் 25) நீதிபதி வி.பார்த்திபன் அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தார் நீதிபதி. சம்பந்தப்பட்ட மூன்று திருநங்கைகளையும் காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory