» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணையை மக்கள் எப்படி நம்புவார்கள்? கனிமொழி ஆவேசம்

புதன் 26, ஜூன் 2019 3:56:02 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில், ஒரு போலீசார் பெயரை கூட சேர்க்கவில்லை. இந்த நிலைமையில் விசாரணை நடைபெற்றால் எப்படி நியாயம் கிடைக்கும் என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார். 

லோக்சபாவில் இன்று கனிமொழி தனது உரையில் கூறியதாவது: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், நாட்டின் மனசாட்சியையே உலுக்கியது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. 13 பேர் அதே இடத்தில், கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் மருத்துவமனைகளில் பலியாகினர். மொத்தம் பலியானவர் எண்ணிக்கை 16.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. நான்கு மாதங்களில் விசாரணை முடிவடைய வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு கழிந்த பிறகும், உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டு, 10 மாதங்கள் கழிந்து விட்ட நிலையிலும், சிபிஐ இன்னும் விசாரணையை முடிக்கவில்லை. சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில், ஒரு போலீசார் பெயரை கூட சேர்க்கவில்லை. இந்த நிலைமையில் விசாரணை நடைபெற்றால், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தூத்துக்குடி மக்கள் எப்படி நம்புவார்கள். 

தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து. விசாரணை நடத்துவதற்காக ஒரு குழுவையும் கூட அனுப்பி வைத்தது. ஆனால் தமிழக அரசு சொன்னதை, மட்டும் கேட்டுக்கொண்டு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், காயமடைந்தவர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்களால் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியும் கூட திருப்திகரமானதாக இல்லை. எனவே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், காயமடைந்தோர் மற்றும் கொலை செய்யப்பட்டோருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும். 17வயது ஸ்னோலின் என்ற இளம்பெண் உட்பட பல இளைஞர்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கனிமொழி பேசினார்.


மக்கள் கருத்து

தம்பிJun 27, 2019 - 02:03:45 PM | Posted IP 162.1*****

தாமிரபரணி போராட்டத்தில் எத்தனை போலீசார் மீது உங்கள் தந்தை வழக்கு பதிந்தார்

samiJun 26, 2019 - 06:27:31 PM | Posted IP 162.1*****

இதை காரணம் காட்டியே தேர்தலில் இவர் நிறுத்தப்பட்டார் - ஆனால் இவர்களும் காங்கிரசும் தான் இந்த சூழ்நிலைக்கு காரணம் என்பதை மக்கள் உணர்வார்கள் - முன்னாள் நிர்வாக இயக்குனர் திரு சிதம்பரம் என்பதை திறமையாக மறைத்து விட்டார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory