» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2017-18ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் மடிக்கணினி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

புதன் 26, ஜூன் 2019 3:45:14 PM (IST)

2017-18ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பயின்ற மாணவிகள் 396 பேருக்கும், ஆண்கள் பள்ளியில் 150 மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. அதேபோன்று, சிங்கம்பேட்டை அரசுப் பள்ளியில் 160 பேருக்கும், ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசுப் பள்ளியில் 60 பேருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.  தற்போது, மேல்நிலைக் கல்வி பயில்வோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வரும்  நிலையில் முன்னாள் மாணவர்களுக்கு முதலில் வழங்க வேண்டும் எனக் கோரி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளிகளில் குவிந்தனர்.  

பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் குவிந்த மாணவ, மாணவிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க மாணவர்கள் புற்ப்பட்டுச் சென்றனர். மாணவர்கள் முற்றுகையால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 2017-18 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த 450 மாணவிகள் மடிக்கணினி கேட்டு பள்ளியில் மனு அளித்து வந்தனர். 

அப்போது நடப்பு ஆண்டு மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி வரும் நிலையில் தங்களுக்கும் வழங்காமல் அலைகழிக்கப்படுவதாக முன்னாள் மாணவிகள் குற்றம்சாட்டினர். பின்னர் பள்ளி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் செவ்வாய்க்கிவமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம், பள்ளி தலைமை ஆசிரியை பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, முன்னாள் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை வெளியிடப்பட்டதாகவும், அந்த அரசாணைப்படி மடிக்கணினி வழங்கப்படும் என அரசு வெளியிட்ட அரசாணையை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்து துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாணவர்கள் சிறப்பாக படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 ஆணடுகளாக மடிக்கணினி வழங்கப்படாத மாணவர்களுக்கு தற்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory