» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களின் தாகத்தை அரசியலாக்கி பதவி தாகத்துக்கு போராடுவதா? ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்!!

செவ்வாய் 25, ஜூன் 2019 4:46:37 PM (IST)

சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்றிருக்கலாம் என்று குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்  கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்து, குடம் இங்கே, தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்.

சிங்கப்பூர் சென்றதிற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்றும் கேட்டுவிட்டு வந்து, இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம். மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்.. இவ்வாறு, அந்த அறிக்கையில் தமிழிசை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJun 26, 2019 - 11:57:25 AM | Posted IP 162.1*****

தன்மீது உள்ள ஊழல் பற்றி முதலில் மாறன் விளக்கம் தரட்டும்

ஆசீர். விJun 25, 2019 - 05:22:28 PM | Posted IP 162.1*****

பாராளுமன்றத்தில் இந்த ஊழல் அரசை பற்றி தயாநிதி பேசினால் பாஜக காரன் கூப்பாடு போடுறான். அதேபோல மாநிலத்தில் ஸ்டாலின் பேசினால் இங்குள்ள பாஜகவினர் கூப்பாடு போடுகின்றனர். அப்போ இதில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு ஓனர் யாருன்னு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory