» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்

சனி 15, ஜூன் 2019 4:21:00 PM (IST)

அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிரேஸ் பானு என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஜூன் 14) நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். 

அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி நலவாரியம் தொடங்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்குச் சலுகை வழங்கும் வகையிலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்ய வகை செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory