» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்நீதிமன்றம் அதிரடி

திங்கள் 10, ஜூன் 2019 5:30:08 PM (IST)

அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோட்டில் நேற்று ஒரு கார் தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் சாலையில் சென்றது. இந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பத்திரிகைகளிலும், டி.வி.சேனல்களிலும் செய்தியாக வெளியாகின.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் வழக்குகளை இன்று காலையில் விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர், தாம்பரத்தில் நேற்று நடந்த விபத்து துரதிருஷ்டவசமானது. சாலையில் சென்றுக்கொண்டிருந்த 4 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது வாகன விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்களை ஓட்டுவதால் தான் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கின்றன. இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? என்று அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

அவர் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதி கூறியதாவது: ‘அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களின் மோட்டார் வாகன உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்று மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கான தண்டனையை 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பிரிவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில் படித்து பார்த்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை வருகிற 17-ந் தேதிக்கு முடிவு செய்வேன்.’இவ்வாறு நீதிபதி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory