» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைகோவின் தேர்தல் ராசியை விமர்சித்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மதிமுக பதிலடி!!

திங்கள் 27, மே 2019 12:17:44 PM (IST)வைகோவின் தேர்தல் ராசியை விமர்சித்த  மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மதுரைியில் ம.தி.மு.க.வினர் சுவரொட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார். தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெறாது என்றும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வைகோ இடம் பெற்றிருந்த கூட்டணி தோல்வியடைந்ததால் அவரது அரசியல் ராசியை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டனர். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பும் வைகோவை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த ம.தி.மு.க.வினர் ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் வைகோவின் படத்துடன் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும், வைகோவும், ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த முறை வைகோவின் ராசி ராகுலை காவு வாங்கி விட்டது என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீண்டும் மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.


மக்கள் கருத்து

குமார்மே 27, 2019 - 04:39:41 PM | Posted IP 162.1*****

ஹா ஹா ஹா இம்முறை அண்ணன் அவர்கள் டார்கெட் ராகுல் தானம்......ராசி அப்படி....

சாமிமே 27, 2019 - 03:56:50 PM | Posted IP 162.1*****

அது சரி மிஸ்டர் பாலா அவர்களே - ஆனால் நான் குறி வச்சது மிஸ்டர் பப்பு

பாலாமே 27, 2019 - 03:28:31 PM | Posted IP 108.1*****

சாமி தமிழ்நாட்டுலே பி ஜே பி காலி..

சாமிமே 27, 2019 - 12:56:32 PM | Posted IP 162.1*****

அய்யய்யோ - என் கேரக்டரையே புரிச்சுக்கலையே தம்பி - இந்த முறை எனது இலக்கு பப்பு சுடலை அல்ல - சோலியை முடிச்சேனா இல்லையா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory