» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை: பியூஸ் கோயலுக்கு, தமிழிசை நன்றி

திங்கள் 27, மே 2019 12:10:05 PM (IST)

தமிழக ரயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 20–ந்தேதி சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில்(ஐ.சி.எப்.) ‘அப்ரண்டிஸ்’ பணிகாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ரயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக தமிழக பா.ஜ.க. சார்பில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழக பா.ஜ.க. சார்பில் ரயில்வே துறையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுத்த ரயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory