» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது யாரெல்லாம் ஸ்லீப்பர் செல் என்பது தெரியும்: டி.டி.வி.தினகரன்

திங்கள் 27, மே 2019 11:26:20 AM (IST)

"அ.தி.மு.க. ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் வரும்; அப்போது யாரெல்லாம் ஸ்லீப்பர் செல் என்பது தெரியும்" என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக(அ.ம.மு.க.) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். ஒரே ஒரு தொகுதி கூடுதலாக கிடைத்ததன் மூலம் அ.தி.மு.க. ஆட்சி தப்பியது. அ.தி.மு.க. ஆட்சி முடிவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். இதற்கான காரணம் போக போக தெரியும். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அ.தி.மு.க. ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும்போது யாரெல்லாம் ஸ்லீப்பர் செல் என்பது தெரியும். தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.வுக்கு ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. இது நம்பும்படியாக இல்லை. பொதுமக்கள், கட்சிக்காரர்கள் வாக்களிக்கவில்லை என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அ.ம.மு.க. ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு முடியும்வரை இருந்துள்ளனர். அவர்கள் கூடவா அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

இதுதொடர்பாக அனைத்து விவரங்களையும் பெற்ற பின்னர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது குறித்து முடிவெடுப்போம். தேர்தலின் போது தி.மு.க.வோடு மறைமுகமாக கூட்டணி வைத்திருந்ததாக கூறுவது தவறானது. யாரோ சிலர் கட்சியை விட்டு செல்வதால் அந்த கட்சி அழிந்துவிடும் என்று நினைப்பது தவறானது. எங்களை விட்டு பிரிந்து செல்பவர்களை பற்றி கவலைப்படவில்லை. உண்மையானவர்கள் எங்களோடு இருப்பது தான் எங்களுக்கு நல்லது. வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் எங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட மாட்டோம். ஒரே ஒரு தேர்தலை வைத்து கட்சியின் தலையெழுத்தை நிர்ணயிக்க முடியாது. எங்கள் கட்சி வலுவாகத்தான் உள்ளது. இன்னும் வலுப்படுத்துவோம். வருங்காலத்தில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

வருண்மே 28, 2019 - 10:52:29 AM | Posted IP 108.1*****

கேப்பமாரி

அருண்மே 27, 2019 - 07:30:44 PM | Posted IP 157.5*****

மொள்ளமாரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory