» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

திங்கள் 27, மே 2019 10:57:11 AM (IST)

தமிழகத்தில் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலின் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உள்ளது. பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி உள்ளது. 

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைக்க வாய்ப்பில்லை” என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory