» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்கள் பாஜகவின் பி டீம் அல்ல. நேர்மைக்கான ஏ டீம். : மநீம தலைவர் கமல்ஹாசன்பெருமிதம்

வெள்ளி 24, மே 2019 12:39:15 PM (IST)

நாங்கள் பாஜகவின் பி டீம் அல்ல. நேர்மைக்கான ஏ டீம். நேர் வழியில் சென்றால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்துள்ளனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கட்சி வேட்பாளர்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "14 மாத குழந்தையான எங்களை தமிழக மக்கள் எழுந்து நடக்க ஓட பழக்கியுள்ளனர். நேர்மையான முறையில் முயன்று வாக்கு பெற்றிருக்கும் இவர்களை மக்கள் நீதி மய்யம் பார்வையில் வெற்றி வேட்பாளர்களாகவே பார்க்கிறேன். இவர்களை, நாளைய வெற்றி வேட்பாளராக பார்க்கிறேன். அவர்களுக்கு, ஒத்துழைப்பும் அரவணைப்பும் கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி.

நேர் வழியில் சென்றால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் கொடுத்துள்ளனர். கிராமப்புறங்களில் வாக்குகள் கிடைக்காமல் போனதுக்கு காரணம், பாதுகாக்கப்பட்ட ஏழ்மையே காரணம். வறுமையை வெல்வது கடினம். பணப்புயல் மத்தியில் இத்தனை வாக்குகள் பெற்றதே மகிழ்ச்சியளிக்கிறது. 5 வருடத்துக்கு பிறகு தேவை என்பதால் அவர்கள் வறுமையை பாதுகாத்து வைக்கிறார்கள்.  நாங்கள் பாஜகவின் பி டீம் அல்ல. நேர்மைக்கான ஏ டீம்.  தமிழ்நாடை இந்தியாவின் ஒரு பகுதியாகவும், வளமாகவும் வைத்திருப்பது அவர்களது (பிரதமர் மோடியின்) கடமை. நீங்கள் வெற்றி பெற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.  

ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் அல்ல நாங்கள். அது போன்ற திட்டங்கள் இங்கு தான் செயல்படுத்த வேண்டும் என்று சொல்வதை தான் நாங்கள் எதிர்ப்போம். விவசாய நிலங்களுக்கு நடுவில் அது வேண்டாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் புழங்கும் இடத்தில் நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பதாகத்தான் அதை பார்க்கிறேன். விவசாயம் கெட்டுப்போவதை தடுப்போம். அரசியல் தொழில் அல்ல, இது என்னுடைய கடமை. தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு. அந்தப் பயணம் நாளை, நாளை மறுநாள் என தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory