» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை: தங்கதமிழ்ச்செல்வன்

வெள்ளி 24, மே 2019 12:19:31 PM (IST)

"தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று அமமுக வேட்பாடளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று (மே 23) எண்ணப்பட்டன. அதில், தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கூறுகையில், "எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மிண்டும் தமிழக முதல்வராக்கும். தேனியில் ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட வரவேற்றிருப்பேன். 

தேனி மக்களவை தொகுதியில் மகனை ஜெயிக்க வைத்த ஓபிஎஸ் பெரியகுளம், ஆண்டிபட்டியை கைவிட்டது ஏன்? பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டது மிகப்பெரிய மைனஸ், மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

இவன்மே 25, 2019 - 01:01:05 PM | Posted IP 162.1*****

கருமயுத்தம் மவனும் நாட்டுக்கு அசிங்கம் ...

சாமிமே 25, 2019 - 12:48:21 PM | Posted IP 108.1*****

முப்பது ஏழு தொகுதியில் இப்படி நடந்ததா சொன்னாங்க மிஸ்டர் செந்தில்

செந்தில்மே 25, 2019 - 10:31:54 AM | Posted IP 162.1*****

அவன்தான் ரிசல்ட் வருவதுற்கு முன்னாடி ஜெய்ச்சுட்டேன்னு கல்வெட்டு வச்சுட்டானே அப்புறம் எதுக்கு வோட்டை எண்ணனும்

செந்தில்மே 25, 2019 - 10:29:38 AM | Posted IP 173.2*****

ஒட்டு பேட்டி நைட் கொண்டு இறக்கும் பொது போதைல ஏஜென்ட் இருந்தால், அவன் பேட்டிய இறக்கிட்டான் ஜெயிச்சுட்டான்.குட் சப்போர்ட் பிஜேபி எலெக்ஷன் கமிசன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory