» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக அரசு குறித்த உண்மை விரைவில் தெரிய வரும் : அமைச்சர் கடம்பூர்ராஜூ பேட்டி

வியாழன் 23, மே 2019 7:51:16 PM (IST)மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக மக்களுக்கு தீங்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக பாெய்யான பிரச்சாரங்களை மேற் கொண்டுள்ளனர். அது பற்றிய உண்மை நிலை விரைவில் மக்களுக்கு தெரியவரும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறியுள்ளார்.

விளாத்திகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு சான்றிதழ் தேர்தல் அதிகாரி சுகுமாரால் வழங்கப்பட்டது. அப்பொழுது அமைச்சர் கடம்பூர்ராஜூ, மாவட்டஆட்சியர் சந்திப்நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் என ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார். இன்று அது பொய்த்து விட்டது. 

நாங்கள் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றுவோம். தமிழக வாக்காளர்கள் பாராளுமன்றத்திற்கு வேறு விதமாகவும் சட்டமன்றத்திற்கு வேறுவிதமாகவும் வாக்களித்துள்ளனர். இது கூட்டணிக்கு பெரிய ஏமாற்றம். பாஜக அரசு தமிழக மக்களுக்கு தீங்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக பாெய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். அது பற்றிய உண்மை நிலை விரைவில் மக்களுக்கு தெரியவரும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory