» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் பின்னடைவு திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு!!

வியாழன் 23, மே 2019 5:46:37 PM (IST)

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 90 இடங்களுக்கு மேல் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளும், ஒரு எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டன. தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் களமிறங்கினார். 

இந்தநிலையில், தற்போதைய நிலவரப்படி  அன்புமணி, 458432 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் செந்தில்குமார், 458432 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக இடம் பெற்ற நிலையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தநிலையில், ஏமாற்றம் அளிக்கும் விதமாக தேர்தல் முடிவு வந்துள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்ற போதும், தருமபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory