» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம், திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய வாக்காளகளுக்கு நன்றி! - வைகோ

வியாழன் 23, மே 2019 4:53:56 PM (IST)

தமிழகம், திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அண்ணா தி.மு.க. அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள  முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா தி.மு.க. அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அண்ணா தி.மு.க., அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும். வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன. 

தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்து இருக்கின்றார்கள்.  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு அளித்து, மாபெரும் வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு, நன்றி மலர்களைக் காணிக்கை ஆக்குகின்றேன். என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

செல்வகணபதிமே 25, 2019 - 10:53:46 AM | Posted IP 162.1*****

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தளபதியாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் .மோடியை எதிர்க்க தளபதி சரியான ஆளுமை .

ஒருவன்மே 24, 2019 - 09:22:40 PM | Posted IP 173.2*****

கோட்டை யாவது , கொட்டையாவது ...

ஆசீர். விமே 24, 2019 - 03:04:28 PM | Posted IP 162.1*****

திரு பிரேமலதாவா அப்படின்னா திருமதி யாரு சுபாசு

சுபாஷ்மே 24, 2019 - 11:46:03 AM | Posted IP 162.1*****

திரு.பொன்னார், திரு,தமிழிசை, திரு.ரவீந்திரநாத்(அதிமுக), திரு.பிரேமலதா(தேமுதிக), திரு.கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்), திரு.அன்புமணி - இவர்களை அமைச்சர்கள் ஆக்குங்கள் - எதிரணிக்கு வயிறு எரியும் - அடுத்த முறை வெல்லலாம்

சாமிமே 24, 2019 - 09:50:42 AM | Posted IP 162.1*****

நாடு முழுவதும் மலர்ந்த தாமரை தமிழகத்தில் ஏன் மலரவில்லை - சிம்பிள் - அது மலரின் மீது குற்றம் இல்லை - மந்தான் மலடாக இருக்கிறது - வைத்தியம் செய்து சரிசெய்வோம்

சாமிமே 24, 2019 - 09:42:01 AM | Posted IP 162.1*****

பொய்யாய் சொல்லி மக்களை தெருவில் நிறுத்தி விட்டீர்கள் - உங்கள் குலம் வாழட்டும்

திருமே 23, 2019 - 05:49:14 PM | Posted IP 172.6*****

அய்யோ-- அய்யோ ----

வெட்டிமே 23, 2019 - 05:47:49 PM | Posted IP 172.6*****

நடந்த தேர்தல் நாடாளுமனத்திற்கானது - அதில் தோல்வி அடைந்தற்காக அதிமுக வருத்தப்பட தேவை இல்லை - நல்ல ஒரு போராட்டம் - விஷமிகளின் விஷம கருத்துக்கள் புரியாததால் - துரோகிகளாலும் வெற்றியில் முடியவில்லை பரவாயில்லை - உங்களால் சிறுபான்மை மக்களை ஒருங்கிணைக்க முடிந்தது - ஒத்துக்கொள்கிறேன் - ஆனால் உங்கள் முகத்திரை விரைவில் கிழியும் - சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு பழுது இல்லை - எனவே விலகுமாறு கோரி எங்காவது சுவற்றில் முட்டிக்கொண்டு இருங்கள் - வேறு ஒன்றும் நடக்கப்போவது இல்லை

முருகன்மே 23, 2019 - 05:43:05 PM | Posted IP 172.6*****

அந்த கோட்டை - உங்கள் தவறான பிரச்சாரங்களால் ஆன மண்கோட்டை - அது தகரும் நாள் வெகு விரைவில் வரும்

சாமிமே 23, 2019 - 05:41:33 PM | Posted IP 172.6*****

இந்த முறை இவரது இலக்கு காங்கிரசும் - ராகுலும் - கச்சிதமான வேலை தம்பி - வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory