» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை கோரி மனு: தேர்தல் ஆணையமே முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 16, மே 2019 12:47:47 PM (IST)

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.  

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு முன்பாக, "பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசி வருகிறார். ஆகவே, அவர் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். அதனை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், "ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில் நீதிமன்றம் தலையிட இயலாது. ஆகவே, இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க இயலாது" என மறுத்து விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory