» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மோடியின் அடிமை ஆட்சி முடிவுக்கு வரும் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

வியாழன் 16, மே 2019 12:06:49 PM (IST)

"தமிழகத்தில் நடந்து வரும் மோடியின் அடிமை ஆட்சி வருகிற 23ம் தேதியோடு முடிவுக்கு வரும்" என ஒட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒட்டப்பிடாரம் சந்தை திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது: புதுச்சேரியில் புயல் வந்தபோது உதவாத மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். 

இந்த திட்டங்களை தமிழகத்தில் ஏன் முதல்வர் எதிர்க்கவில்லை?. மோடியின் அடிமை ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. மோடியின் தம்பிகளான ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். தலையசைத்து வருகிறார்கள். அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மூன்றாண்டு காலம் மத்தியில் மோடி அரசையும், மாநிலத்தில் கிரண்பேடியையும் சமாளித்து ஆட்சியை நடத்திவருகிறேன். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு செய்யவில்லை. மோடி ஆட்சியில் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பணக்காரர்களுக்கு தான் மோடி ஆட்சியில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

மோடியின் மக்கள் விரோத ஆட்சி 23-ந் தேதிக்கு பின்னர் முடிவுக்கு வரும்.  தமிழகத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் தான் நல்லாட்சி வழங்கமுடியும். தோல்வி பயத்தில் தமிழிசை பொய் பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. ஒரே வரியாக்கப்படும். புதியமுத்தூர் பகுதி குட்டி ஜப்பானாக தொழில் வளத்தில் சிறப்பாக இருந்தது. இப்போது அந்த பகுதியில் வேலை வாய்ப்பில்லாத நிலை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் வேலை வாய்ப்பு போய்விட்டது. மோடி ஆட்சியில் 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory