» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு மத்திய பாஜக அரசு அழைத்துச் செல்லும் : ஜி.கே வாசன் பிரசாரம்!!

வியாழன் 16, மே 2019 8:33:05 AM (IST)


"இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக அழைத்துச் செல்லும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பெ. மோகனை ஆதரித்து தாளமுத்துநகரில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது அவர் பேசியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை தடம்புரளாமல் தற்போது உள்ள அரசு செய்துகொண்டிருக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை திட்டங்களை கொண்டுச் சேர்ப்பதில் முதல் வரிசையில் அமரக்கூடிய ஆட்சியாளராக இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணி யதார்த்தமான கூட்டணி. திமுக, காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு. இந்தத் திட்டத்தால் 80 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.  இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக அழைத்துச் செல்லும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்தக் கருத்து உள்ளது என்றார் அவர். பிரசாரத்தின்போது, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அதிமுக வேட்பாளர் பெ. மோகன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, புதியம்புத்தூர் பகுதியில் ஜி.கே. வாசன் பிரசாரம் மேற்கொண்டார்.


மக்கள் கருத்து

தமிழன்-மே 16, 2019 - 06:40:42 PM | Posted IP 162.1*****

வாசன் ஒரு கோமாளி

ராமநாதபூபதிமே 16, 2019 - 10:06:05 AM | Posted IP 162.1*****

உங்க தோப்பனார் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால் இப்படியெல்லாம் இந்த வாய் பேசுமா? என்ன ஒரு ஏமாற்றுவித்தை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory