» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு எதுவும் இல்லை‍: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி

புதன் 15, மே 2019 3:22:39 PM (IST)

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித குறைபாடும்  இல்லை‍ என அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த குறைபாடும் இல்லை. அவருக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த போது 4 வாரங்கள் நான் உடன் இருந்தேன்" என பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 15, 2019 - 03:27:01 PM | Posted IP 108.1*****

உண்மையிலேயே அந்த அம்மாவுக்கு சிகிச்சை கொடுத்தீர்களா இல்லை சும்மா வைச்சு இருந்தீர்களா??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory