» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யாராக இருந்தாலும் மதரீதியான கருத்துகளை சிந்தித்துப் பேச வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்

செவ்வாய் 14, மே 2019 5:22:56 PM (IST)

மதரீதியான கருத்துகளை பேசும்போது யாராக இருந்தாலும் சிந்தித்துப் பேச வேண்டும் என கமல்ஹாசனுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமலுக்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தி உள்ளன. 

இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் "கமல்ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பிறப்பால் அவர் ஓர் இந்து. மதரீதியான கருத்துகளை பேசும்போது யாராக இருந்தாலும் சிந்தித்துப் பேச வேண்டும். எந்த மதத்தையும் தரக்குறைவாக பேசினாலும் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக தலைவர் ஸ்டாலின்- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரின் சந்திப்பில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இருவரின் சந்திப்பு நட்பு ரீதியிலானது என நாங்கள் கருதுகிறோம் என பிரேமலதா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory