» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசன் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் : தமிழிசை பேட்டி

செவ்வாய் 14, மே 2019 2:12:35 PM (IST)
இந்துக்கள் குறித்து பேசியதற்காக கமல்ஹாசன் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டியின் போது கூறினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தூத்துக்குடி வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஓட்டப்பிடாரம் உட்பட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவை சந்தித்த பிறகு பதட்டத்திலும், குழப்பத்திலும் உள்ளார். எங்கள் கூட்டணியில் அதுபோன்று எதுவும் இல்லை. தூத்துக்குடி மக்கள் ஸ்டாலினுக்கு பதநீர் தான் கொடுப்பார்கள். ஆனால் பதவி கொடுக்க மாட்டார்கள். 

ஸ்டாலின் காங்.தலைவர் ராகுலை பிரதமர் என்றார். நேற்று தெலுங்கானா முதல்வரை சந்திக்கிறார். மேலும் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார். திமுக பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அக்கட்சி நிறம் மாறும் கட்சி என இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.இந்தியாவில் வேலுாரில் மட்டுமே தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதுவும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் போட்டியிடும் தொகுதி ஆகும் . தேர்தல் ரத்து செய்த பின் அவர்களது புகழ் பரவி விட்டது. கமல்ஹாசன் இந்துக்கள் குறித்து பேசியதற்காக அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேட்டியின் போது அமைச்சர் காமராஜ், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 14, 2019 - 02:38:00 PM | Posted IP 172.6*****

போம்மா போ. மூழ்கப்போகும் கப்பலில் பயணிக்க யாருக்கும் மனம் வராது. பாஜக ஒரு முழுகும் கப்பல். நீ தான் கப்பலில் விழுந்த ஓட்டையை கையை கொண்டு அடைக்க முயலுகிறாய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory