» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

செவ்வாய் 14, மே 2019 12:47:14 PM (IST)

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அங்கு பிரசாரம் செய்தார். அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான நாதுராம் கோட்சே இந்துதான் என குறிப்பிட்டார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் பேட்டி அளித்த போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று கடுமையாக  விமர்சித்திருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அமைச்சர் பதவியிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மைமே 16, 2019 - 11:40:21 AM | Posted IP 162.1*****

மந்திரி என்ன படிப்பு. வழி பறி திருடன் மாதிரி தெரிகிறது.

மனிதன் - தமிழன் - இந்தியன்மே 15, 2019 - 10:04:10 AM | Posted IP 162.1*****

கமல் ஏன் மன்னிப்பு கேக்க வேண்டும் . முதலில் கமல் சொன்னது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சேவும் இந்துதான் சொன்னார் தவிர இந்துக்கள் எல்லாரும் தீவிரவாதி சொல்லல . மக்கள் அதைபுரிந்து கொள்வார்கள் . மததை வைத்து அரசியல் பனிப்பார்கள் மட்டும் தான்இதை மாற்றி பேசுவார்கள் . சீந்தித்து செயல்படுங்கள் .

தமிழன்மே 14, 2019 - 02:39:12 PM | Posted IP 172.6*****

முதலில் ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் கமல்ஹாசன்......ஹிந்துக்களுக்கு எதிராக கமல் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory