» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என்று பேசுவது தீவிரவாதம் இல்லையா?- கே.எஸ்.அழகிரி கேள்வி

செவ்வாய் 14, மே 2019 12:01:33 PM (IST)

"இந்து தீவிரவாதம் பற்றி கமல்ஹாசன் பேசியது தவறு என்றால், அவரது நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா?" என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் பற்றிய பேச்சு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் பாயத் தொடங்கிவிட்டன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து உள்ளார். கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள் என்றார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது: கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா? இதுவும் தீவிரவாதம். சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள், மாற்று கருத்து உடையோரை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை உடையவர்கள். ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்புக்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எனவே கமல்ஹாசன் கூறியதை ஆயிரம் சதவீதம் ஆதரிக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory