» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை

செவ்வாய் 14, மே 2019 10:23:08 AM (IST)

தூத்துக்குடியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். 

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்றார்.

முன்னதாக, இன்று காலை 8.30 மணியளவில் அவர் தங்கியுள்ள தனியார் ரிசார்ட்ஸ் விடுதியில் இருந்து, விமானநிலையம் சென்று மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காகவும், அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்வதற்காகவும் பாதுகாப்பு வாகனமும், திமுகவினர் வாகனங்களும், மு.க.ஸ்டாலின் பிரச்சார வாகனமும் புறப்பட்டது. ரிசார்ட்ஸ் வாசலிலேயே, தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த இரு குழுவினர், அந்த வாகனங்களை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர்.

இதனிடையே ஒட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2-ஆம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் என்ற இடத்தில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நடந்து சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory