» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

செவ்வாய் 14, மே 2019 8:41:30 AM (IST)

"இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். 

இது குறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அவர்களை தீவிரவாதி என்றுதான் கூற வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டை பெறுவதற்காக இந்துக்களை பற்றி பேசும் கமல்ஹாசன் நாக்கை ஒருகாலத்தில் அறுக்கத்தான் போகிறார்கள். 

இது போன்ற பேச்சுக்களை கமல்ஹாசன் நிறுத்த வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய முறையில் தலையிட்டு அவரது கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நாங்கள் சாதனையை சொல்லித்தான் ஓட்டு கேட்டு வருகிறோம். தி.மு.க. ஆட்சியில் சாதனைகள் இல்லை. அவர்கள் 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார்கள். ஒரு சென்ட் இடம்கூட யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் தி.மு.க.வினர் இருக்கும் நிலத்தை வளைத்துக் கொண்டனர். 

தி.மு.க. என்று சொன்னாலே தில்லுமுல்லு கட்சிதான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று கூறிவிட்டு, சந்திரசேகரராவுடன் 3-வது அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது கூட்டணிக்கு குழிபறிக்கும் செயலாகும். நம்பகத்தன்மை இல்லாத கட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு தி.மு.க., அண்ணா தலைமைக்கு பிறகு தி.மு.க.வை நம்பி சென்றவர்கள், தி.மு.க.வுக்கு உழைத்தவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். இன்று உதயநிதி ஸ்டாலின் கையில் தி.மு.க.வை ஒப்படைத்து விட்டார்கள். கத்திரி வெயிலில் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். 

மக்கள் ஏமாந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க., அ.தி.மு.க. பிளவு பட்ட நேரத்தில் குறுக்குவழியில் ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க., மக்களால் தேர்வு செய்யப்பட்ட கட்சியாக தி.மு.க. ஒருபோதும் வரவில்லை. மக்கள் விரும்பி ஆட்சிக்கு வந்த கட்சி அ.தி.மு.க. தான். 28 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்தது. ஆகையால் மக்கள் விரும்பும் கட்சி அ.தி.மு.க.தான். தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு கிடையாது. அந்தமானில் சென்று நிற்க வேண்டியதுதான். அடையாளம் காணப்பட்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகி உள்ளார். எங்களுக்கு வரக்கூடிய கூட்டம் மக்கள் விரும்பி வரக்கூடிய கூட்டம். இந்த கட்சிதான் ஆளும். வாழும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

தமிழ்மே 14, 2019 - 11:53:45 AM | Posted IP 162.1*****

RSSகு மதம் இல்லை னு சொல்லுங்க..

மதிமே 14, 2019 - 11:22:03 AM | Posted IP 172.6*****

காந்தியை கொன்றால் கொலைகாரன் என்று சொல்ல சொல் ஆனால் இந்து மதம் எங்கே வருகிறது ? தீவிரவாதம் எங்கே வருகிறது ? இந்து தீவிரவாதி என்றும் சொல்ல அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்.காலம் காலமாக மதமாற்றம் தீவிரவாதம் மூலமாக இந்தியாவின் வளங்களை அளிக்க துடிக்கும் கிறிஸ்தவ அந்நிய கொள்ளையரகள் அரேபிய வெறியர்கள் குறித்து பேச சொல்லு.தின்பது இந்தியாவில் விளைந்த பொருள். சுவாசிக்கும் காற்று இந்தியாவில் இருந்து. குடிக்கும் தண்ணீர் இந்தியாவில் இருந்து .விசுவாசம் மட்டும் ஐரோபிய தேசத்திற்கும் அரேபிய தேசத்திற்கும்.நீங்கள் செத்தால் உடலை இங்குதான் புதைப்பார்கள் அரேபியாவிலோ ஐரோப்பாவிலோ புதைக்க மாட்டார்கள் அதே போல உன் வாரிசுகள் கலாச்சாரத்தோடு பண்போடு நாகரித்தோடு இயற்கை வளத்தோடு வாழ போவது இந்தியாவில் தான் என்பதை மறவாதே .இந்து சமயத்தை அளிக்க வேண்டும் என்று நினைத்தால் தனக்கு தானே தீ வைத்து கொள்வதற்கு சமம் .இந்துவும் இயற்கையும் வேறு அல்ல தொட்டால் உன் வாரிசுகள் அழிவார்கள் விரைவில் நடக்கும் அதுவும் பாவத்தோடு செய்யும் உன் காரியங்களை இறைவன் பார்க்கிறேன் உன் சுயநலம் உன் வாரிசுகள் உன் கண் முன்னாள் அழிவதை பார்க்க போகிறாய் இது ஓலை சுவடியில் உள்ளது விரைவில் நடக்கும் தமிழகம் பார்க்கும் ஓம் நமசிவாய

RV hariமே 14, 2019 - 09:23:44 AM | Posted IP 162.1*****

அவர் முஸ்லிம்களின் ஓட்டுக்களுக்காக இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லையா பகுத்தறிவு பற்றிப் பேசும் எந்த தலைவர்களாவது கிறிஸ்தவர்களை முஸ்லிம்களை பற்றி பேசி இருக்கிறார்களா

இவன்மே 14, 2019 - 08:56:56 AM | Posted IP 162.1*****

அப்போ காந்தியை கொன்ற கோட்சே ஒரு அப்பாவியா??? அந்த கூத்தாடி சொல்வது உண்மை தானே ..உண்மையான இந்து என்றால் காந்தியை கொலை செய்திருக்க மாட்டான் புத்தி யோடு காந்தியிடம் பேசுவான் .. ஆனால் RSS காந்தியை கொன்றது... உண்மையான இந்துக்களை அழிக்க RSS தான் கரணம் .. அந்த வோடோபோன் நாய் ஏன் கத்துது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory