» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

திங்கள் 13, மே 2019 5:40:10 PM (IST)திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ஆம் தேதி வர உள்ளன. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசினார். அதைப்போல, மு.க.ஸ்டாலினை மே 13-ஆம் தேதி சந்தித்துப் பேசுவதற்கு சந்திரசேகர ராவ் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. 

அதன்படி மு.க.ஸ்டாலினை  ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். அதே சமயம், காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் சந்திரசேகர ராவை இன்று சந்தித்துப் பேசியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்டாலினை சந்தித்த பிறகு கர்நாடக முதல்வரையும்  அவர் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory