» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியாவில் 3வது அணிக்கு சாத்தியமே இல்லை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து

திங்கள் 13, மே 2019 5:08:08 PM (IST)

இந்தியாவில் 3வது அணிக்கு சாத்தியமே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தியாகி கக்கன் மகன் சத்யநாதனை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் கே.எஸ். அழகிரி. அப்போது அவரிடம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்தது போல, சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினை தரிசிக்கவிருக்கிறார் சந்திரசேகர ராவ். 

நாட்பின் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இந்தியாவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என கே.எஸ். அழகிரி தெரிவித்தார். மேலும், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியின் காரணமாகவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கூறினாரா? என்று எடக்கு மடக்காக கேள்வி கேட்டு மடக்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory