» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்: தலைமை தேர்தல் அதிகாரி

திங்கள் 13, மே 2019 4:26:53 PM (IST)

தமிழகத்தில் மே 27ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2-ம் கட்டமாக கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 7-ம் கட்ட மக்களவை தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23 ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தேர்தல் நடைமுறைகள் மே 27 ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் அன்று வரை தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory