» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசனின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் மனு

திங்கள் 13, மே 2019 4:20:42 PM (IST)

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் மனு அளித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியதாக வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார். அதில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தெரிவித்தார். முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதிஒரு இந்து. 

அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக சமமான இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். அதனை மார்தட்டிச் சொல்வேன் எனக் கூறினார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  பல்வேறு தரப்பினர் ஆதரவும் தந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது, கமல்ஹாசன் மீது பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory