» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கமல் பேச்சு : தமிழிசை கண்டனம்

திங்கள் 13, மே 2019 1:36:44 PM (IST)

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய், தமிழிசைசெளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,  பள்ளப்பட்டியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தெரிவித்தார். அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார்.கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் நேற்றைய அரவக்குறிச்சி பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஓபராய், அன்புள்ள கமல் நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.கோட்சே தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் இந்து என குறிப்பிட்டு கூறினீர்கள். நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதாலா? நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.கமல்ஹாசனின் கருத்து குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை , மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார். கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனம், ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சுரேஷ்மே 13, 2019 - 05:16:48 PM | Posted IP 172.6*****

அவர் பேசியது சேரி பாஷை

தனி ஒருவன்மே 13, 2019 - 04:53:00 PM | Posted IP 172.6*****

கமல் பேசியது சேரி தான்

தமிழன்மே 13, 2019 - 02:04:34 PM | Posted IP 172.6*****

கமல்ஹாசன் அவர்கள் இவ்வாறு தரம்தாழ்ந்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களிடம் கமல் பகிரங்க மன்னிப்புகேக்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory