» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலஅருவிகளில் நூல் போல் விழும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வெள்ளி 26, ஏப்ரல் 2019 11:40:57 AM (IST)பிரசித்தி பெற்ற குற்றாலஅருவிகளில் தண்ணீர் குறைந்து நூல் போல் நீர் விழுகிறது.

தமிழகத்தில் மிகசிறந்த சுற்றுலா ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சீசன் காலமாகும். இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வெளிநாடுகள் மற்றுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

ஆனால் கடந்த மாதம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாததாலும் கடும் வெயில் அடித்து வருவதால் அருவிகளில் விழுந்து வந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து வறண்டு கிடந்தது. சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் தண்ணீர் பழையபடி ஆர்ப்பரித்து விழுந்தது. ஆனால் மீண்டும் மழை குறைந்து வெயிலடிக்க தொடங்கியதால் தண்ணீர் வரத்து குறைந்து நூல் போல் தண்ணீர் விழுகிறது. சுற்றுலாபயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory