» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: மே 1ம் தேதி தொடங்குகிறார்

வெள்ளி 26, ஏப்ரல் 2019 8:55:26 AM (IST)

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரசாரம் மேற்கொள்கிறார்.

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (மே) 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

முதல்-அமைச்சரின் பிரசார சுற்றுப்பயண விவரம் பின்வருமாறு: சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் ஜல்லிப்பட்டியில் 1-ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்குகிறார். அதனைத்தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு செஞ்சேரிமலையிலும், 6.45 மணிக்கு சுல்தான்பேட்டையிலும், இரவு 7.45 மணிக்கு செலக்கரிச்சலிலும், 8.45 மணிக்கு பாப்பம்பட்டியிலும், 9.20 மணிக்கு பாப்பம்பட்டியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் 5-ம் தேதி மாலை 5 மணிக்கும், வேலாயுதம்பாளையத்தில் 5.45 மணிக்கும், புன்னம் சத்திரத்தில் 6.30 மணிக்கும், க.பரமத்தியில் இரவு 7.15 மணிக்கும், தென்னிலையில் 8 மணிக்கும், சின்னதாராபுரத்தில் 8.45 மணிக்கும், நஞ்சை காளகுறிச்சியில் 9.15 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.

திருப்பரங்குன்றம்-ஓட்டப்பிடாரம்

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து 6-ம் தேதி மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் விரகனூர், 5.45 மணிக்கு ஐராவதநல்லூர், 6.30 மணிக்கு சிந்தாமணி, இரவு 7.30 மணிக்கு வளையங்குளம், 8 மணிக்கு பெருங்குடி, 8.45 மணிக்கு அவனியாபுரம் பஸ் நிலையம், 9.20 மணிக்கு அவனியாபுரம் எம்.எம்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 7-ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், 5.40 மணிக்கு புதியம்புத்தூர், 6.20 மணிக்கு தருவைக்குளம், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை ஊரணி, 8 மணிக்கு முத்தம்மாள் காலனி, 8.45 மணிக்கு முத்தையாபுரம், 9.20 மணிக்கு புதுக்கோட்டை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து 11-ம் தேதி மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, 5.30 மணிக்கு வடபழஞ்சி, 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி.பட்டி, 8 மணிக்கு நிலையூர் கைத்தறிநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 12-ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், 5.45 மணிக்கு வல்லநாடு, 6.30 மணிக்கு தெய்வசெயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவலாப்பேரி, 8 மணிக்கு ஒட்டநத்தம், 8.45 மணிக்கு ஒசநூத்து, 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அரவக்குறிச்சி 

அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி காலனியில் 13-ம் தேதி மாலை 5 மணிக்கும், அரவக்குறிச்சியில் 5.45 மணிக்கும், பள்ளப்பட்டியில் 6.30 மணிக்கும், இனங்கனூரில் இரவு 7.15 மணிக்கும், குரும்பப்பட்டியில் 8 மணிக்கும், ஆண்டிப்பட்டி கோட்டையில் 8.45 மணிக்கும், ஈசநத்தத்தில் 9.15 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.

சூலூர் 

சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் 14-ம் தேதி மாலை 5 மணிக்கும், அதனைத்தொடர்ந்து 5.45 மணிக்கு முத்துக்கவுண்டன் புதூரிலும், 6.45 மணிக்கு வாகாயம் பாளையத்திலும், இரவு 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோட்டிலும், 8 மணிக்கு கருமத்தம்பட்டியிலும் (சோமனூர் பவர் ஹவுஸ்), 8.30 மணிக்கு சாமளாபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 9.20 மணியளவில் சூலூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory