» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கக் கடலில் வலுவான தாழ்வுப் பகுதி; கன மழை வாயப்பு : தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

வியாழன் 25, ஏப்ரல் 2019 5:42:18 PM (IST)

ஏப்ரல் 30ம் தேதியும் மே 1ம் தேதியும் தமிழகத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் அவ்விரு நாட்களும் தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அலர்ட் விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தற்பொழுது வலுவான தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. டென்மார்க் ஒட்டியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வலுவான தாழ்வுப் பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதாவது 26ம் தேதி இரவு தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது, 27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான தாழ்வுப் பகுதி வடதமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தால் வரும் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒருசில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக அதிகக் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது. அதே போல, 26ம் தேதி முதல் கடற்பரப்பு சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் அதிகமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory