» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்: ஸ்டாலின் நம்பிக்கை

வியாழன் 25, ஏப்ரல் 2019 3:32:31 PM (IST)

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தல் களத்தில் "மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்" என்று  திமுக தலைவர் ஸ்டாலின், கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது கட்சியை சேர்ந்த தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாத்து, எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.க. வின் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார்.

திமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகள், போட்டியிட வாய்ப்பு அமையாத சூழல் ஏற்பட்ட போதும் திமுகவின் வெற்றிக்காக செயலாற்றிய கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு இதயமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அயராத உழைப்பிற்கும், மக்கள் தந்த ஆதரவிற்கும் முழுமையான வெற்றி கிடைக்கும்."மக்களின் தீர்ப்பு நன்றாக அமையும் நாளாக மே 23 விடியும்" என்று  ஸ்டாலின், கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

samiApr 29, 2019 - 08:38:02 PM | Posted IP 172.6*****

அகில இந்திய பத்திரிகைகளை படியுங்கள் - திராவிட பத்திரிகைகள் ஒரே பொய்யுரைத்தான் - கருப்பு பலூன் விட தான் லாயக்கு -

ஆசீர். விApr 27, 2019 - 11:46:04 AM | Posted IP 172.6*****

பாஜக 150 தொகுதிகளை தாண்ட வழி இல்லை. அதன் ஒரே சுயபுராணம் பாடி நடித்து கொண்டே இருக்கிறார் நமோ நாயகன்

சாமிApr 25, 2019 - 04:09:22 PM | Posted IP 172.6*****

மிக நன்றாகவே அமையும் - மோடிஜி நானூறு இடத்துக்கும் மேலே வென்று ஆட்சி அமைப்பார் - தமிழக்தில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெரும் - சுடலை வழக்கம் போல ஏதாவது காரணம் தேட வேண்டியதுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory