» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தற்கொலை முயற்சி : கற்களை வீசியதால் பரபரப்பு

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 7:00:42 PM (IST)




மதுரை மத்திய சிறையில் கைதிகள் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும் போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா தலைமையில் போலீசார் இன்று மாலை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் சோதனை நடத்தினர். அப்போது கைதிகள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பிடிபட்டன. இதனால் கோபமான இருவரும் போலீசாரை கீழே பிடித்து தள்ளியதாக தெரிகிறது.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு கைதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அந்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இதையடுத்து கைதிகள் சிறையில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள மரங்களில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அப்போது கைதிகள் பலரும் கற்களை வீசி போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது சிறைத்துறை அதிகாரிகளை தாக்கியது அப்பள ராஜா கும்பலைச் சேர்ந்த இரண்டு கைதிகள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory