» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்டிபிஐ கட்சியினர் புகார் எதிரொலி: கருணாநிதியின் மகள் செல்வி மீது வழக்குப் பதிவு

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:45:33 PM (IST)

சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினருடன் வாக்குவாதம் செய்ததாக கருணாநிதியின் மகள் செல்வி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தயாநிதி மாறன் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் திமுகவினர் 30பேர்  நேற்று முன்தினம் இரவு சூளைமேடு, இளங்கோவடிகள் தெரு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது, அதே பகுதியில் எஸ்டிபிஐ வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியினரும் வாக்கு சேகரித்ததாகவும் அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், விலாசத்தை சரிபார்த்துக் கொண்டிருந்ததாகவும் இதை பார்த்த செல்வி அவர்களிடம் சென்று வாக்குவாதம் செய்து ஓட்டுக்கு பணம் எப்படி கொடுக்கலாம் என்று தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியினர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, செல்வி மற்றும் திமுக நிர்வாகி திருமலை உள்ளிட்டவர்கள் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory