» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அறிந்து பாஜக பயமுறுத்த முயல்கிறது: மு.க.ஸ்டாலின்

திங்கள் 15, ஏப்ரல் 2019 10:55:57 AM (IST)

திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு திமுகவை பயமுறுத்த பாஜக முயற்சிக்கிறது.  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்திருக்கிறோம். திமுக ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. தற்போதைய அதிமுக அரசு அதை நுழைய விட்டது.

அமைச்சர்கள் நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவில்லை. பிறகு, யாரை ஏமாற்ற நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது? நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் மையங்களில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம். ஆனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றால் அதனை கலந்து பேசி சுமுகமான தீர்வு காண வேண்டும். பாமக 8 வழிச் சாலை திட்டம் ரத்து உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக சொல்கிறார்கள். நீதிமன்றம் 8 வழிச் சாலையை ரத்து செய்திருந்தும், அத்திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுவது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

திமுக கூட்டணி கடந்த 3 ஆண்டுகளாக மக்களுடைய பிரச்னைகளுக்காக போராடி ஒன்று சேர்ந்தது. கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவை அரசியல் நாகரிகம் இல்லாமல் விமர்சனம் செய்துவிட்டு பாமகவினர் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். அதிமுக கூட்டணி வியாபார ரீதியாக அமைக்கப்பட்டது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வந்திருந்தும் திமுக தோற்றது.

திமுக மீது களங்கம் ஏற்படுத்தவே பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் வீட்டில் சோதனை செய்கிறார்கள். திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டு திமுகவை பயமுறுத்த பாஜக முயற்சிக்கிறது. திமுக ஒரு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. அதிகாரிகளை மாற்றக் கோரியும் மாற்றவில்லை என்றவர், அதிமுகவின் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முறை யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory