» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி பெற கனிமொழிக்கு வாக்களியுங்கள் : மதிமுக பொதுசெயலாளர் வைகோ

வெள்ளி 22, மார்ச் 2019 8:34:03 PM (IST)தூத்துக்குடி வளர்ச்சியடைய திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களிக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுகூட்டம் விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழியை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது, நீதிமன்றத்தில் நீதி கேட்ட நான் தூத்துக்குடி மண்ணில் சிந்திய ரத்தத்திற்காக இன்று மக்கள் மன்றத்தில் நீதி கேட்கிறேன்.

அதிமுக அரசு காவல்துறையை ஏவி துப்பாக்கிசூடு நடத்தியது. இதற்கு மக்களாகிய நீங்கள் நீதி வழங்க வேண்டும். மோடி அரசு அரசியல் நிர்ணய சட்டத்திற்கே கொள்ளி வைக்க பார்க்கிறது. இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்கிறார்கள். பாசிசமா, ஜனநாயகமா என்றால் ஜனநாயகம் வெற்றி பெற தூத்துக்குடி மக்கள் வாக்களிக்க வேண்டும். தூத்துக்குடிக்கு நல்ல ஒரு வேட்பாளரை மு.க. ஸ்டாலின் தந்துள்ளார். 

தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் அடையவும், அதிக ரயில்கள் தூத்துக்குடிக்கு கிடைக்கவும், புதிய ரயில்பாதைகள் கிடைக்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் கனிமொழிக்கு வாக்களிக்க வேண்டும். லட்சக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் கனமொழியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் பலமாக ஒலிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஐ மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, விசிக கட்சி மாவட்ட செயலாளர் அகமதுஇக்பால், திக மாவட்ட தலைவர் பெரியாரடியான், இந்திய ஜனநாயககட்சி மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன். தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதிதமிழர் பேரவை செண்பகராஜ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

சாமிMar 24, 2019 - 11:47:27 AM | Posted IP 162.1*****

உனக்கு எல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே கிடையாதா - நடைபிணமா நீ

தூத்துகுடிகாரன்Mar 23, 2019 - 11:21:54 AM | Posted IP 172.6*****

திரு வைகோ அவர்களே, கனிமொழி அவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் கவலை வேண்டாம்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory