» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள் : சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம்

வெள்ளி 22, மார்ச் 2019 5:50:07 PM (IST)

எழுவர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திமுக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜீவ் காந்தி கொலைகாரர்களை விடமாட்டோம். என்ன ஆனாலும் விடுதலை கிடையாது. எழுவர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள திமுக அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

அவர்களை விடவே மாட்டோம். மாநில அந்தஸ்தில் இருக்கிற தமிழிசைக்கு டெல்லியின் கொள்கைகள் தெரியாது. இதுகுறித்து டெல்லிதான் முடிவு செய்ய வேண்டும். எழுவர் விடுதலைக்கு டெல்லி ஒத்துக்கொள்ளாது. 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை, அது நடக்காது' என்றார் சுவாமி.


மக்கள் கருத்து

தமிழன்-Mar 23, 2019 - 05:50:38 PM | Posted IP 172.6*****

சூரியனை பார்த்து நாய் கொறைக்குது ..நீ நல்ல காத்து..

ஆசீர். விMar 23, 2019 - 09:56:30 AM | Posted IP 172.6*****

நாங்க உன்னையே குப்பைத்தொட்டியில் தான் வைத்துள்ளோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory