» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: ஜெ.தீபா அறிவிப்பு

வெள்ளி 22, மார்ச் 2019 5:15:28 PM (IST)

நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெ. தீபா அறிவித்து இருந்தார். விரைவில் அவருடைய வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்  என எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக ஜெ.தீபா திடீரென என பல்டி அடித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபடுவர். நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர்தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது. அதிமுகவுடன் என்னுடைய இயக்கத்தை இணைப்பேன். இது தொடர்பான பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும். அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பிரசாரம் மேற்கொள்வேன். அதிமுகவில் எந்தஒரு பொறுப்பையும் நான் எதிர்பார்க்கவில்லை. அதிமுகவின் எதிர்கால நலன் மட்டுமே முக்கியமானது. கட்சி அழிவுப்பாதைக்கு சென்றுவிடக்கூடாது. அதற்காக பணியாற்றுவேன் என ஜெ.தீபா அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory