» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீமான் தலைமைக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது: நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

வெள்ளி 22, மார்ச் 2019 4:38:31 PM (IST)சீமான் தலைமையிலான அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் கூறினார். 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான். தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. 

இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான். ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து

மக்கள்Mar 25, 2019 - 03:15:54 PM | Posted IP 162.1*****

அவசரப்படாதே அண்ணா வலிக்க போகிறது

தமிழ்ச்செல்வன்Mar 25, 2019 - 02:18:56 PM | Posted IP 162.1*****

ரிசல்ட் சொல்லும்போது தெரிய வரும். ஒவ்வொருவனுக்கும் தம்பிகள் கொடுத்த அடி எப்படி என்று. அது வரை கொஞ்சம் பொறுங்கள்.

ArunMar 24, 2019 - 12:19:15 AM | Posted IP 162.1*****

Orama po kudikaara

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory