» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்: அமமுக தேர்தல் அறிக்கையில் தினகரன் வாக்குறுதி

வெள்ளி 22, மார்ச் 2019 3:23:16 PM (IST)

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். 

இதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: 

கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். 

விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். 

ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறு அமைக்கப்படும். 

மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறை கொண்டு வரப்படும். 

ஏழை பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய  வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்படும். 

இளைஞர்கள் சுய உதவி குழு அமைக்கப்படும்.

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு தனி நல வாரியம். 

பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். 

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

கோவை, திருச்சி, மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். 

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமிMar 26, 2019 - 06:56:51 PM | Posted IP 108.1*****

காசு கொடுத்து ஒட்டு வாங்கும் கயவன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory