» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் வாகன சோதனையில் ரூ.4.5 கோடி பறிமுதல்: வங்கிக்கு சொந்தமானதா?

வெள்ளி 22, மார்ச் 2019 12:42:26 PM (IST)

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.50 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.4.50 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் வந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, அந்த பணம் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான பணம் என்றும், திருச்சியில் இருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். 

ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.  இதையடுத்து பணத்துடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.  பணத்திற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory