» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் 21பேர் பட்டியல்.. கமல்ஹாசன் வெளியிட்டார்!!

புதன் 20, மார்ச் 2019 3:33:48 PM (IST)மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களைவத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வாரமாக விருப்பமனு அளித்த 1300பேருக்கு நேர்காணல் சென்னையில் நடைபெற்றது. 

இந்நிலையில் நேற்று காலை வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது. வரும் 24ம் தேதி இரண்டாம் கட்டவேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதன்படி

வட சென்னை - மவுரியா

மத்திய சென்னை கமீலா நாசர்

ஸ்ரீபெரும்புதூர் - சிவக்குமார்

அரக்கோணம் - ராஜேந்திரன்

வேலூர் - சுரேஷ்

கிருஷ்ணகிரி - எஸ். ஸ்ரீகாருண்யா

தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்

விழுப்புரம் (தனி)- வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம்- பிரபு மணிகண்டன்

நீலகிரி (தனி) - ராஜேந்திரன்

திண்டுக்கல் - டாக்டர் சுதாகர்

திருச்சி - வி. ஆனந்தராஜா

சிதம்பரம் (தனி)- டி.ரவி

மயிலாடுதுறை - ரிபாயுதீன்

நாகப்பட்டினம் (தனி) - குருவய்யா

தேனி - வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி - பொன் குமரன்

திருநெல்வேலி - வென்னிமலை

கன்னியாகுமரி - எபனேசர்

புதுச்சேரி - சுப்பிரமணியம்

திருவள்ளூர் (தனி)- டாக்டர். லோக ரங்கன்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory