» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருந்தாளுநர் பணிக்கு போலி நியமன ஆணை: அமைச்சரின் உதவியாளர் உட்பட 3 பேர் கைது

புதன் 20, மார்ச் 2019 3:26:07 PM (IST)

புதுக்கோட்டை அருகே  மருந்தாளுநர் பணிக்கு போலி நியமன ஆணை தயார் செய்தது தொடர்பாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதியைச் சேர்ந்தவர் முத்துராசு மகன் கார்த்திகேயன்(23). இவர், தன்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக நியமனம் செய்யுமாறு அரசாணை, பணி நியமன ஆணை போன்றவற்றை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் நேற்று முன்தினம் அளித்துள்ளார். அதில், பணி நியமன ஆணை போன்ற கடிதத்தில் முதல்வர் மீனாட்சி சுந்தரம் கையெழுத்திட்டதாக இருந்துள்ளது. தான் கையெழுத்திடாத நிலையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியடைந்த மீனாட்சிசுந்தரம், இதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஆய்வாளர் லட்சுமி மேற்கொண்ட விசாரணையில் கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பசுபதி மகன் பிரபாகரன்(33) என்பவர் மூலம் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சேர்ந்தவரும் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் உதவியாளராகவும் இருந்த விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன்(25) என்பவர் ரூ.2 லட்சத்தை வாங்கிக்கொண்டு மருத்துவக் கல்லூரி முதல்வரின் கையெழுத்தை போலியாக இட்டு, போலி பணி நியமன ஆணை தயாரித்து தந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன், பிரபாகரன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து

இவன்Mar 20, 2019 - 03:47:46 PM | Posted IP 162.1*****

இவரெல்லாம் ஒரு பிராடு .. நாட்டுக்கே கேவலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory