» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டி: மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

வியாழன் 14, மார்ச் 2019 4:37:35 PM (IST)

தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அளிக்க நாளை மறுநாள் கடைசிநாள். விருப்ப மனுவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு டி.டி. எடுத்து கட்சி தலைமை அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் சென்னை, பொள்ளாச்சி தலைமையகங்களில் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவை கொடிசியா வளாகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணி அளவில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory