» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

திங்கள் 11, மார்ச் 2019 11:30:41 AM (IST)


மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு நாட்டின் தலைசிறந்த விருதான பத்மஸ்ரீ விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் அமைத்து கடந்த 50 ஆண்டுகளாக ஆன்மிகத்துடன் மக்கள் நலனுக்கான பல சீரிய பணிகளை ஆற்றி ஆன்மிகத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் அருள்திரு அடிகளார். இந்த அரிய சேவையினை கௌரவிக்கும் விதமாக இந்திய குடியரசுத் தலைவர் ஆன்மிகத் துறைக்கான பத்மஸ்ரீ விருதினை அருள்திரு அடிகளார் அவர்களுக்கு வழங்கினார். 

முன்னதாக மார்ச் 9ஆம் தேதி காலை செவ்வாடை பக்தர்களின் சிறப்பான வரவேற்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அருள்திரு அடிகளார் விமானம் மூலம் டெல்லியை அடைந்ததும் அங்கும் பூர்ண கும்பத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்ந நிகழ்ச்சி இன்று டெல்லியில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர், அருள்திரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். மேலும் பல செவ்வாடைப் பக்தர்களும் கலந்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory